போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு மலர்த்தோட்டம்
முழுமையான வசதிகளுடன் சுயதொழிலுக்கு ஒரு தொடக்கம்.

போரால் பாதிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளி ஒருவரின் குடும்பத்துக்குத் தமிழ் கொடி முழுமையான ஆதரவை வழங்கியது. நிலையான சுயதொழில் ஒன்றைத் தொடங்க, முழு வசதிகளுடன் கூடிய மலர்த்தோட்டம் ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டது.
இது பொருளாதார நிலைத்தன்மையோடு, போரின் நீண்டகாலத் தாக்கங்களைத் தாங்கிய குடும்பங்களுக்குக் கண்ணியத்தையும் சுதந்திரத்தையும் மீட்டுத் தருகிறது. ஒவ்வொருவரின் தேவைக்கும் ஏற்ற வாழ்வாதார வாய்ப்புகள் மூலம் தன்னிறைவையும் சமூக மீள்இணைவையும் ஊக்குவிக்கிறோம்.
சமூக அடிப்படையிலான அர்த்தமுள்ள உதவிகள் மூலம் வாழ்வை உயர்த்தி மீளக் கட்டியெழுப்புவதே எமது பரந்த நோக்கம்.


