எம்மைப் பற்றி
தற்காலிக உதவிக்கு அப்பால், நீடிக்கும் மாற்றம்.
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த போர் 2009-இல் ஓய்ந்தது. ஆனால் அதன் தாக்கம் இன்றும் வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் வாழ்வில் தொடர்கிறது. உதவி செய்ய பலர் முயன்றார்கள்; அதில் பெரும்பகுதி உண்மையில் தேவைப்பட்டவர்களைச் சென்றடையவில்லை.
அடிமட்டத்தில், மக்களுடன் நேரடியாகப் பணியாற்றி, கண்ணியத்துடனும் நம்பிக்கையுடனும் வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதே தமிழ் கொடியின் வழி. ஒவ்வொரு பணியும் கருணை, வெளிப்படைத்தன்மை, எல்லோருக்கும் சிறந்த வாழ்வுக்கு உரிமை உண்டு என்ற நம்பிக்கை ஆகியவற்றால் இயங்குகிறது.

கல்விப் பங்காளர்: டென்மார்க்கைத் தளமாகக் கொண்ட வாழ்க்கைக் கல்வி (Life Education).






































