யாழ்ப்பாண அலுவலகம் திறப்பு
3 ஜூன் 2023 — நிறுவுநர் ரவிசங்கர் சுகதேவன் திறந்து வைத்தார்.

2023 ஜூன் 3 அன்று, தமிழ் கொடியின் இலங்கை அலுவலகத்தை நிறுவுநர் திரு. ரவிசங்கர் சுகதேவன் அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார். தமிழ் கொடியின் வளர்ச்சியிலும் பிரதேசத்தில் அதன் இருப்பிலும் இது ஒரு முக்கிய மைல்கல்.
இலங்கையில் தமிழ் கொடியின் செயற்பாடுகளுக்கான மையமாக இந்த அலுவலகம் இயங்கும்; உள்ளூர்ச் சமூகத்துடனான உறவுகளை வலுப்படுத்தி, நடைபெறும் திட்டங்களுக்குத் துணைநிற்கும்.
எமது பணியை இன்னும் பரவலாகவும் அதிக தாக்கத்துடனும் தொடர்வதற்கான உறுதியின் வெளிப்பாடு இது.




